ஞாயிறு, 19 மே, 2013

தேர்தல் முடிந்தும் பாகிஸ்தானில் தொடரும் வன்முறைகள் : எதிர்க்கட்சிப் பெண் தலைவர் சுட்டுக் கொலை



பாகிஸ்தானின் பிரதான எதிர்க் கட்சிகளில் ஒன்று முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரி-இ-இன்சாஃப் ஆகும். இக்கட்சியின் சிந்து மாகாணத் துணைத் தலைவராகக் கடமையாற்றி வந்தவர் சாக்ரா சாகித் ஹுசைன் ஆவார்.
இவர் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.


சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இவரின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப் படும் வேளையில் இவர் மரணமடைந்துள்ளார். இதற்குக் காரணமாக் துப்பாக்கிக் குண்டு இவரின் தலையில் பாய்ந்தமை கூறப்படுகின்றது.

சம்பவத்தைக் கேள்வியுற்ற தெஹ்ரி-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் மிகவும் அதிர்ச்சியானதுடன் இதற்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்துக்கு பிரிட்டன் அரசும் அங்கு தங்கியிருக்கும் தனது அரசியல் போட்டியாளருமே இதற்குப் பொறுப்பு எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் தேர்தல் முடிந்த பின் நிகழ்ந்த மோசமான தீவிரவாதிகளின் தாக்குதலில் ஒன்று என இச்சம்பவம் கூறப்படுகின்றது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் மத்தியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக்கின் தலைவரான நவாஸ் ஷெரிப் மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக