ஞாயிறு, 19 மே, 2013

புதுடெல்லி வந்தடைந்தார் சீனப்பிரதமர் : இன்று மாலை மன்மோகன் சிங்குடன் சந்திப்பு



சீனப் பிரதமர் லீ கெகியாங் இன்று நண்பகல் புதுடெல்லியை வந்தடைந்தார்.

சமீபத்தில் இந்திய லடாக் எல்லையில் சீனப்படையினர் அத்துமீறி உள்நுழைந்து கூடாரங்கள் அமைத்து அடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பின்னர் இரு நாட்டு பேச்சுவார்த்தையின் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இன்று சீனப்பிரதமர் லீ கெகியாங் இந்தியா வருகை தருகிறார். சீனாவுடன் உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் நடந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும், இதற்குரிய வாய்ப்பை சீனப்பிரதமரின் வருகை ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சீனப்பிரதமர் லீ கெகியாங் டெல்லிக்கு இன்று வருவதையொட்டி, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
27 வருடங்களுக்கு பிறகு லீ கெகியாங் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அதோடு சீனப் பிரதமராக பதவியேற்றதற்கு பிறகு முதன்முறையாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொண்டுள்ள விஜயமும் இதுவே ஆகும்.

இன்று மாலை புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நிகழ்த்தவுள்ளார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக அவரது இந்திய சுற்றுப்பயணம் அமைகிறது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக